இலங்கை
Trending

QR குறியீடு சிக்கல்களுக்கு புதிய தீர்வு: ஓவர்ரைட் வசதி அறிமுகம்!

எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ‘ஓவர்ரைட்’ (Override) எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களிலுள்ள பிழைகளைத் திருத்தி, புதிய முறையில் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதனால் பயனர்கள் தமது முந்தைய பதிவுகளை முழுமையாக நீக்கிவிட்டு, புதிதாகப் பதிவு செய்துகொள்ள முடியும்.

ஒரு வாகனம் ஏற்கனவே வேறொரு தொலைபேசி இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது சரியான வாகன விபரங்கள் மற்றும் செசி இலக்கத்தை (Chassis Number) வழங்குவதன் மூலம் புதிய தொலைபேசி இலக்கத்தின் கீழ் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்தும் போது வாகனத்தின் துல்லியமான விபரங்களை வழங்குவது அவசியமாகும்.

தவறான தொலைபேசி இலக்கங்கள் அல்லது தரவுப் பிழைகள் காரணமாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போன வாகன உரிமையாளர்களுக்கு இந்த ‘ஓவர்ரைட்’ வசதி பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button