இந்தியா
Trending

கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாள் கால அவகாசம் – தமிழக ஆளுநர் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம் மட்டுமல்லாது பெரும்பான்மையை நிரூபித்தால், எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியும் என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை தான் தடுக்கவில்லை எனவும், பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சியமைக்க எப்படி அழைப்பது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கே அவருக்கு யார் ஆதரவு என்னும் விபரத்தை விஜய் தெரிவிக்க வேண்டும்.

ஆளுநர் மாளிகைக்கு பெரும்பான்மையை நிருபிக்க 118 எம்எல்ஏக்களையும் அழைத்து வர வேண்டிய அவசியமில்லை.
பெரும்பான்மைக்குரிய ஆதாரங்களோடு எந்தக் கட்சி வந்தாலும் அதை ஏற்று பரிசீலனை செய்வேன்.

பெரும்பான்மை ஆதரவு விபரத்தை வழங்கிய பின்னர் அவர்கள் சட்டசபையில் தங்களின் பெரும்பான்மையை நிருபித்தால் போதுமானது.

எதிர்வரும் 3 நாட்களில் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க யாரும் உரிமை கோரவில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வேன்” என தமிழக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button