இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி நீக்க, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்!

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர்
பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும்,

அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஞானப்பிரகாசம் கிஷோர், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, மூன்றாவது தடவையாக இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 1ஆம், 2 ஆம் எதிர் மனுதாரர்களான வடக்கு மாகாண ஆளுநர்,உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் சார்பாக அரச சட்டவாதியால் பதில் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்வதற்காக வழக்கு தவணையிடப்பட்டது.

இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி சாவகச்சேரி நகரசபை கூட்டமும், உபதவிசாளர் தெரிவும் இடம்பெறவிருப்பதை வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் மீண்டும் மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அதனை ஆராய்ந்த நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன், தமது கட்சிக்காரர்களின் நிலையையறிந்து தெரிவிக்குமாறு அரச சட்டவாதிக்கு அறிவுறுத்தினார்.

அதற்கமைய கூட்டத்தையும், உப தவிசாளர் தெரிவையும் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு மாற்ற எதிர்த் தரப்பு இணங்கியது.

அதற்கமைய 1ஆம் 2ஆம் எதிர் மனுதாரர்கள் தங்களின் ஆட்சேபனைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இறுதி விவாதம் 24 ஆம் திகதி இடம்பெறும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் அறிவுறுத்தி வழக்கை தவணையிட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button