இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

பரத நாட்டிய அரங்கேற்றம்!

பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் இயக்குநர் ஸ்ரீதேவி கண்ணதாசனின் மாணவியும், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் மாணவியுமான லக்ஸ்மிகா திஸாகரனின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்றிரவு (07) இடம்பெற்றது.

வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் கா.சந்திரபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திருமதி சாந்தினி சிவனேசன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button