இலங்கை
Trending

பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் சந்திப்பு!

இங்கிலாந்துக்கு உத்தியோக விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, லண்டனிலுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வேவை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடல் லண்டனில் மார்ல்பரோ இல்லத்தில் நடைபெற்றது.

காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி, ஜனநாயக நல்லாட்சி, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்கான பொதுநலவாய அமைப்பின் ஆதரவு தொடர்பாக இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நிலைபேறான அபிவிருத்தி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நல்லாட்சிக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை பிரதமர் மீண்டும் இதன்போது உறுதிப்படுத்தினார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button