இலங்கை
Trending

மருத்துவ அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

உள்ளகப் பயிற்சித் தகுதியைப் பூர்த்தி செய்துள்ள 453 மருத்துவப் பட்டதாரிகளை தரம் I மருத்துவ அதிகாரிகளாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 04ஆம் திகதியுடன் தங்களது உள்ளகப் பயிற்சி காலத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ள மருத்துவப் பட்டதாரிகள் இந்த நியமனங்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி ஏப்ரல் 04, 2026 நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதை விண்ணப்பதாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இறுதித் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு அமைச்சு எவ்விதப் பொறுப்பையும் ஏற்காது எனவும், காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button