மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வர்த்தக மாநாட்டில் யாழ்ப்பாணப் பெண்ணுக்கு கிடைத்த அங்கிகாரம்!

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் “சர்வதேச தமிழர்கள் வர்த்தக மாநாடு” மலேசியாவில் நடைபெற்றது.
அண்மையில் நடந்த மாநாட்டில் பங்கேற்க பல நாடுகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இலங்கையிருந்து பன்னிரண்டு சிறு தொழில் முயற்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இதற்கமைய, யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டையில்இருந்து சிறு தொழில் முயற்சியாளர் சிவராசா மரியறோசரியும் அதில் பங்கேற்றிருந்தார்.
பிரதேசத்துக்கே உரித்தான பனைசார் உற்பத்திகள் மற்றும் ஏனைய உள்ளூர் உற்பத்திப் பொருட்களை அவர் மலேசிய கண்காட்சியில் காட்சிப்படுத்தி, அது தொடர்பான விளக்கமளித்து அனைவரதும் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
மங்கையர் அரங்கம் சார்பாக நாங்களும் சிவராசா மரியறோசரியை வாழ்த்துகின்றோம்.




