
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களால் அமைக்கப்பட்ட வெசாக் தோரணைகளில் யாழ்.மாவட்ட தலைப் பொலிஸ் நிலையம் அமைத்த தோரணை முதலிடத்தைப் பெற்றுள்ளது.
யாழ். தலைப்பொலிஸ் நிலைய மைதானத்தில் அமைக்கப்பட்ட தோரணைகளில், முதலாம் இடத்தை பெற்ற பொலிஸ் நிலையத்துக்கு 25 ஆயிரம் ரூபா காசோலையும்,இரண்டாம் இடத்துக்கு 15 ஆயிரம் ரூபாவும், மூன்றாவது இடத்திற்கு 10 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தப் பரிசு வழங்கும் நிகழ்வில் யாழ்.நாகவிகாரை விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர், வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன, யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களால் அமைக்கப்பட்ட வெசாக் தோரணைகள் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரு தினங்களும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



