இலங்கை
Trending

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41 ஆவது நினைவு தினம்,யாழ்ப்பாணம் வலி தெற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள நினைவுச் சிலையருகில் நேற்று (02) இடம்பெற்றது.

வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

இதன்போது அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அமரர் தர்மலிங்கத்தின் புதல்வரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி, வலி தெற்கு தவிசாளர் தி. பிரகாஷ் ,வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

23 வருடங்கள் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கம், 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி ஆயுத்தாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button