இலங்கை
Trending

லிட்ரோ எரிவாயு விலைக் குறைப்பு!


சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறைத்துள்ளது.

‎இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‎மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button