Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்குற்றவியல்மங்கையர் அரங்கம்
Trending

காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட காதலி- தொடரும் விசாரணை

கொழும்பில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 25 வயதுடைய யுவதி ஒருவர், அவரது காதலனால் தொழிற்சாலை வளாகத்தினுள்ளேயே கத்தியால் குத்திக்கொலை செய்யப்படிருக்கிறார்.

சம்பவம் தொடர்பில் கடந்த 5 நாட்களாகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதீத சந்தேகத்தின் காரணமாகவே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும், மேற்படி யுவதியைப் படுகொலை செய்த காதலன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கொழும்பு ஹக துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கிம்ஹானி பெரேரா என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி காலை வழக்கம் போல் பணிக்குச் சென்ற கிம்ஹானி, தொழிற்சாலையின் பிரதான வாயிலூடாக நுழைந்து தனது பையை வைக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

அங்கு ஏற்கனவே மறைந்திருந்த அவரது காதலன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கிம்ஹானியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

உயர்தரக் கல்வியை முடித்த பின்னர் ஆடைத் தொழிற்சாலையில் இணைந்த கிம்ஹானிக்கும், அங்கு பணிபுரிந்த பதுளை, கெப்பட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் தொடர்பு இருந்துள்ளது.

குறித்த இளைஞர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு கிம்ஹானியின் பாட்டி காலமானதால், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

இதனால் வீட்டில் இருக்கும் நேரங்களில் காதலனுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

“வேலையிடத்தில் நாம் 8 மணிநேரம் ஒன்றாகவே இருக்கிறோம், வீட்டில் இருக்கும் நேரத்தில் எனது பாட்டியின் நினைவுகளுடன் இருக்க அனுமதி கொடு” என்று கிம்ஹானி தனது காதலனிடம் கோரியிருந்தார் என்று கிம் ஹானியின் உறவினர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், காதலி தன்னைத் தவிர்க்கின்றார் என்ற அதீத சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிர்வாகத் திறமைக்காக விரைவில் பதவி உயர்வு பெறவிருந்த நிலையிலேயே கிம்ஹானிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்யப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button