
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த ஆசிய அணிகளுக்கான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி காலவரையின்றி ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த நேரத்தில் போட்டியை நடத்த இயலாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஸ்குவாஷ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலைமை சீராகிய பின்னர் இந்த போட்டியை செப்டம்பர் மாதத்தில் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Follow Us



