இலங்கைஉலகம்குற்றவியல்மேல்மாகாணம்
Trending

வெளிநாட்டிலிருந்துபோதைப் பொருள் கடத்தியவர் மற்றும் அழைத்துபோக காத்திருந்தவர்கள் என மூவர் கைது!

வெளிநாட்டிலிருந்து வருகைதந்த பயணி மற்றும் அவரை அழைத்துச் செல்ல வருவைதந்த இருவர் என மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து போதைப்பொருளை வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்றும் அழைத்துச் செல்ல சென்ற இருவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் வருகைதந்தவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் 26 வயதான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று(06) அதிகாலை 12.35 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்துள்ளார்.

சந்தேக நபர் தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் இரண்டு பொட்டலங்களில் 02 கிலோகிராம் 116 கிராம் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த போதைப்பொருள் மன்னார் பகுதிக்கு எடுத்துச் செல்ல நீர்கொழும்பிலுள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டிற்கு அருகில் மேலும் இரண்டு பேர் காத்திருந்தது தெரியவந்தது.

அதனையடுத்து
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்தெ அவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் இருவரும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களில் ஒருவர் 43 வயதுடையவராகும். அவர் அந்தப் பகுதியில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகிறார். மற்றைய நபர் 36 வயதுடைய சாரதி என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று(06) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button