இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

கிளிநொச்சி - ஸ்கந்தபுரத்தில் கைகலப்பு: 9 பேர் கைது!

கிளிநொச்சி கண்ணகிபுரம் – ஸ்கந்தபுரம் பகுதியில் காற்றாலை திட்ட ஊழியர்களுக்கும், கிராம இளைஞர்களுக்கும் இடையில் நேற்று (24) கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

கற்றாலை அமைக்கப்பட்டுள்ள காணியை பார்வையிட வனவள திணைக்கள அதிகாரிகள் சென்றபோது, திட்ட ஊழியர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கு வந்த கிராம மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.

நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button