இலங்கைவடக்கு மாகாணம்
Trending

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!

யாழ்பாணம் வலிகாமம் வடக்கு, பலாலியில் இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் 13 ஆவது வாரமாகவும் இன்றும்(13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பலாலி சந்தி பகுதியில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

“எங்கள் நிலங்கள் எங்களுடையதே,“எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படை”, “மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே?” உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பியவாறு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button